யாழில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் வட - கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர்

Report Print Gokulan Gokulan in கால்பந்து
60Shares

2018ஆம் ஆண்டுக்கான வட - கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்காசிறி பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் களமிறங்கவுள்ளன.

ஐ.பி.சி தமிழ் சார்பாக “கிளியூர் கிங்க்ஸ்” அணியும், லங்காசிறி சார்பாக “றிங்கோ டைடன்ஸ்” அணியும் களமிறங்கவுள்ளன.

தமிழ் உதைபந்தாட்ட மன்றத்தின் ஏற்பாட்டில் வட - கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் இம்மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஐ.பி.சி தமிழ் பிரதிநிதித்துவப்படுத்தும் “கிளியூர் கிங்ஸ்” அணியும் லங்காசிறி நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்தும் “றிங்கோ டைடன்ஸ்” அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதேவேளை இந்த போட்டிகள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இரவில் விளையாடும் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.

பிறிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் விளையாடவுள்ளன.

இதேவேளை, இந்த பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்காசிறி ஆகிய நிறுவனங்கள் சார்பில் முதன்முறையாக இரு அணிகள் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர் யுவதிகளுக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் பல முயற்சிகளை லங்காசிறி மற்றும் ஐ.பி.சி தமிழ் இணைந்து செயற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் வட - கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரும் இளைஞர்களுக்குள் மறைந்திருக்கும் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு சிறந்த களமாக அமையும்.

தமக்குள் இருக்கும் திறமைகளை வெளி உலகுக்கு காட்டுவதற்கு சந்தர்ப்பம் இன்றி தவிக்கும் வடக்கு - கிழக்கு இளைஞர்களுக்கு இந்த போட்டி ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

ஆகவே எமது இளைஞர்களின் இந்த போட்டி நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு அனைவரும் வருகைத் தந்து, எமது இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இந்த போட்டி நிகழ்ச்சிக்கு வருகைத்தந்து பார்வையிடுவதுடன், வீரர்களை ஊக்குவித்து அவர்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வது எமது அனைவரினதும் கடமையாகும்.

லங்காசிறியை பிரதிநிதித்துவப்படுத்தும் “றிங்கோ டைடன்ஸ்”