யாழில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வடகிழக்கின் மாபெரும் பிரிமியர் லீக்

Report Print Gokulan Gokulan in கால்பந்து

இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் புதிய திருப்புமுனையாக உள்ள வடகிழக்கு பிரிமியர் லீக் (North East Premier League) தொடர் கடந்த 30ஆம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் போட்டியில் ட்ரிங்கோ டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி கிளியூர் கிங்ஸ் அணி வெற்றியை தனதாக்கியது.

இரண்டாவது போட்டியில், மாதோட்டம் ஏப்.சி அணியை ரில்கோ கொன்கியூரஸ் அணி வெற்றிகொண்டது.

மூன்றாவது போட்டியில் நோர்த்தன் எலைட் எப்.சி அணியுடன், தமிழ் யுனைட்டட் எப்.சி அணிகள் மோதியுள்ளன.

அந்த வகையில் இன்று அம்பாறை அவென்ஜேர்ஸ் மற்றும் பட்டி சுப்பர் கிங்கஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில் 8 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் மோதிக்கொள்ளும் விறுவிறுப்பான உதைபந்தாட்ட தொடரின், முதல் பரிசு 50 இலட்சம் ரூபாய், 2ஆம் பரிசு 30 இலட்சம், 3ஆம் பரிசு 15 இலட்சம் ரூபாயாகும்.

அத்துடன், நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கும் 5 இலட்சம் ரூபா பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இந்த போட்டிகள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இரவில் விளையாடும் போட்டிகளாக நடைபெறுகின்றன.

நிகழ்ச்சி நிரல்..

போட்டிகள் காலம் அணிகள்
1ஆவது போட்டி 30.05.2018 கிளியூர் கிங்ள் vs ட்ரிங்கோ டைடன்ஸ்
2ஆவது போட்டி 31.05.2018 மாதோட்டம் ஏப்.சி vs ரில்கோ கொன்கியூரஸ்
3ஆவது போட்டி 03.06.2018 நோர்த்தன் எலைட் எப்.சி vs தமிழ் யுனைட்டட் எப்.சி
4ஆவது போட்டி 04.06.2018 வவுனியா வொரியர்ஸ் vs மன்னார் எப்.சி
5ஆவது போட்டி 05.06.2018 முல்லை பீனிக்ஸ் vs வல்லை ஏப்.சி
6ஆவது போட்டி 06.06.2018 அம்பாறை அவென்ஜேர்ஸ் vs பட்டி சுப்பர் கிங்கஸ்
7ஆவது போட்டி 11.06.2018 ட்ரிங்கோ டைடன்ஸ் vs முல்லை பீனிக்ஸ்
8ஆவது போட்டி 12.06.2018 அம்பாறை அவென்ஜேர்ஸ் vs மாதோட்டம் ஏப்.சி
9ஆவது போட்டி 13.06.2018 கிளியூர் கிங்ள் vs வல்லை ஏப்.சி
10ஆவது போட்டி 14.06.2018 நோர்த்தன் எலைட் எப்.சி vs மன்னார் எப்.சி
11ஆவது போட்டி 15.06.2018 வவுனியா வொரியர்ஸ் vs தமிழ் யுனைட்டட்
12ஆவது போட்டி 16.06.2018 ரில்கோ கொன்கியூரஸ் vs பட்டி சுப்பர் கிங்கஸ்
13ஆவது போட்டி 17.06.2018 அம்பாறை அவென்ஜேர்ஸ் vs ட்ரிங்கோ டைடன்ஸ்
14ஆவது போட்டி 19.06.2018 முல்லை பீனிக்ஸ் vs மாதோட்டம் ஏப்.சி
15ஆவது போட்டி 20.06.2018 கிளியூர் கிங்ள் vs மன்னார் எப்.சி
16ஆவது போட்டி 21.06.2018 நோர்த்தன் எலைட் எப்.சி vs வல்லை ஏப்.சி
17ஆவது போட்டி 22.06.2018 ரில்கோ கொன்கியூரஸ் vs தமிழ் யுனைட்டட்
18ஆவது போட்டி 23.06.2018 பட்டி சுப்பர் கிங்கஸ் vs வவுனியா வொரியர்ஸ்