இறுதிப்போட்டிக்குள் உள்நுழைந்தது குரேஷியா

Report Print Dias Dias in கால்பந்து

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் குரேஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் குரேஷியா அணி வெற்றிப்பெற்றது.

இன்றைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் போட்டியிட்ட நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் குரேஷியா அணி வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.