உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும் வெளிவராத சுவாரஸ்யங்கள்!

Report Print Dias Dias in கால்பந்து
2047Shares

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோசியா அணியை வீழ்த்தி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

உலகக் கிண்ண போட்டியில் முக்கியமான பல அணிகள் தெரிவு போட்டியின் போது வெளியேறி இருந்தாலும், பிரபல்யம் அடையாத நாடான குரோசியா அணி வரலாற்றில் முதல் முறையாக இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி, இறுதிப்போட்டி மாபெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தது.

பிரான்ஸ் அணியின் முதலாவது கோல் குரோசியா வீரரின் உதவியுடனே போடப்பட்டுள்ளது. இரண்டாவது கோலும் அவ்வாறுதான் பிரான்ஸ் பெற்று கொண்டதாக விளையாட்டு அவதானிகள் மத்தியில் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், குரோசியாவின் வீரர்களை கண்டு மைதானத்தில் பிரான்ஸ் அணி அஞ்சியது என்றுதான் கூறவேண்டும்.

லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தும், அரை இறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று தொடங்கிய இறுதி ஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது. இதில் ஆட்டம் தொடங்கிய 18வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

அதன் பின் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் 1 கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இதன்மூலம் முதல்பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது

தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது.

மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார்.

பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது. 65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.

பிரான்ஸ் அணியின் ஒவ்வொரு கோலின் வெற்றிக்கு பின்னாலும் குரோசியா வீரர்களின் பங்கு இருந்தது என்பது உண்மை. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் தலைவர் Harry Kane-க்கு தங்கஷு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக்கோப்பையில் Harry Kane 6 கோல் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து குரோசியா அணியின் நட்சத்திர வீரரான லுகா மேட்ரிக்கிற்கு தங்கப்பந்து கொடுக்கப்பட்டுள்ளது.

குரோசியா அணி மிக சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. யாரும் எதிர்ப்பார்காத வேகம் இந்த வீரர்களிடம் காணப்பட்டது. எனினும், இவர்கள் விட்ட சிறு தவறுகள் பிரான்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தது.

வரலாற்றில் முதல் முறையாக இறுதிக்குத் தகுதி பெற்ற குரோசியா அணி அனைத்து நாட்டு விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க செய்துள்ளது.

இதேவேளை, இன்று பிரான்ஸ் வெற்றி கோப்பையை பெற்றிருந்தாலும், வெற்றி பெற்ற பிரான்ஸ் வீரர்களை விட வேகத்துடன் விளையாடிய குரோசியா வீரர்களை பற்றியே அதிகம் பேசப்படுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!

எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்த போட்டி! தங்கப் பந்தை பெற்ற குரோசியா

ரஷ்யா மீதான கருத்தை மாற்றிய உலகக்கிண்ண கால்பந்து!

தோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி!

பரபரப்பான உலகக்கிண்ண போட்டியில் காதலியுடன் மகிந்தவின் புதல்வர்