தோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி!

Report Print Dias Dias in கால்பந்து
4132Shares

வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிச் சென்ற வெற்றியை நேற்று வரை குரோசியா நாடு கொண்டாடியது. இன்று தோல்வியின் பின்னர் குரோசியாவின் புகழை உலகமே பேசுகின்றது.

இறுதிப்போட்டி மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. குரோசியா வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக வெற்றியை நழுவ விட்டாழும் உலகமே குரோசியா அணியை கொண்டாடுகின்றது.

இதற்கு காரணம் அவர்களின் விடா முயற்சி. உலகப் பந்தில் ஒவ்வெரு இனமும் சாதிக்க பிறந்த இனம்.

அந்த இனங்கள் கால ஓட்டத்தில் சோர்வடைவதை விடுத்து குரோசியா போன்று சவால்களை சிறந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும்.

குரோசியா மக்களின் வரலாறு தமிழினத்திற்கு குறிப்பாக ஈழத் தமிழினத்திற்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையாகவும் அமைந்து விட்டது.

இதேவேளை, இது வரையும் பலருக்கு பெயர் தெரியாத நாடாக குரோசியா இருந்திருக்கலாம். ஆனால், இன்று தேல்வியிலும் குரோசியா வீரர்கள் வெற்றி கண்டுள்ளனர். பலருக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளனர்.

போட்டி முடிவடைந்த பின்னர் குரோசியா நாட்டின் ஜனாதிபதி குரோசியா அணித்தலைவரை தட்டிக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி அவர்களிடம் உள்ள ஒற்றுமையே அந்நாட்டை இவ்வளவு வேகமாக கட்டி எழுப்ப காரணமாக அமைந்தது என அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.

இது தமிழர்களிடம் எவ்வளவு உள்ளது என்று ஒவ்வெரு தமிழரும் ஆராந்து பார்ப்பது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது.

தமிழர் ஒரு காலகட்டத்தில் எல்லாற்றையும் போராடிதான் பெற்றான். போராட்டம் தமிழருக்கு பழகிப்போன ஒன்றாக இருந்தாலும் இவர்களிடம் காணப்படும் ஒற்றுமை தமிழர்களுக்கு ஆழ்ந்த கருத்தை புலப்படுத்துகின்றது.

தொடர்புடைய செய்திகள்

ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெற்றிப் பெற்றாலும் வெளிவராத சுவாரஸ்யங்கள்!

எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்த போட்டி! தங்கப் பந்தை பெற்ற குரோசியா

ரஷ்யா மீதான கருத்தை மாற்றிய உலகக்கிண்ண கால்பந்து!

பரபரப்பான உலகக்கிண்ண போட்டியில் காதலியுடன் மகிந்தவின் புதல்வர்