எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்த போட்டி! தங்கப் பந்தை பெற்ற குரோசிய அணி வீரர்

Report Print Dias Dias in கால்பந்து
362Shares

ரஷ்யாவில் கடந்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமான 21ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைப்பெற்றுள்ளது.

இந்த கால்பந்தாட்டத் தொடரில் 32 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், குரோஷிய அணி வரலாற்றில் முதல்தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் பிரான்ஸ் அணியும், குரோஷியா அணியும் விளையாடியிருந்தன.

எனினும் இந்த பலப்பரீட்சையில் 4 - 2 என்ற கோல் கணக்கில் குரோசிய அணியை, பிரான்ஸ் அணி வீழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் தலைவர் Harry Kaneக்கு தங்க ஷு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் Gary Lineker 6 கோல் அடித்திருந்தார். இதன் பின் தற்போது Harry Kane 6 கோல் அடித்துள்ளார்.

இதேவேளை குரோசியா அணியின் வீரரான லுகா மேட்ரிக்கிற்கு தங்கப் பந்தும், பிரான்ஸ் அணியின் இளம் வீரரான Kylian MBAPPE இற்கு இந்த ஆண்டு உலகக்கோப்பைக்கான சிறந்த இளம் வீரர் என்ற விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெற்றிப் பெற்றாலும் வெளிவராத சுவாரஸ்யங்கள்!

ரஷ்யா மீதான கருத்தை மாற்றிய உலகக்கிண்ண கால்பந்து!

தோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி!

பரபரப்பான உலகக்கிண்ண போட்டியில் காதலியுடன் மகிந்தவின் புதல்வர்

புட்டினுக்கு ஒன்பதை கொடுத்த அரசியல் பிரபலம்!