யாழில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகிய வட - கிழக்கு பிறிமியர் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிகள்

Report Print Shalini in கால்பந்து

யாழில் நடைபெற்று வரும் வட-கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக பல சுற்றுப் போட்டிகளாக இடம்பெற்றுவந்த இந்த போட்டிகளின் அரையிறுதிச் சுற்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அரையிறுதிச் சுற்றுக்கு ரில்கொ கொன்கியுரர்ஸ், கிளியூர் கிங்ஸ், வல்வை எப்சி மற்றும் மன்னார் எப்சி ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றிருந்தன.

இதில் இறுதிப் போட்டிக்கான கனவுடன் ரில்கொ கொன்கியுரர்ஸ் அணியும் கிளியூர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இதில் ரில்கொ கொன்கியுரர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இன்று வல்வை எப்சி மற்றும் மன்னார் எப்சி ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணியுடன் ரில்கொ கொன்கியுரர்ஸ் அணி மோதும். அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த இறுதிப்போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும்.