இந்தியாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள 46வது ஆசிய உதைபந்தாட்டப் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் கோல் காப்பாளராக கிண்ணியா மத்திய கல்லூரியின் தேசிய பாடசாலை மாணவன் எம்.எம்.முர்சித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் செப்டம்பர் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை இந்தியா - ஆக்ராவில் நடைபெறவுள்ள உதைபந்தாட்ட போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும், வழிகாட்டலின் கீழும் இந்தியா செல்வதற்கான முழு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.