வடக்கு, கிழக்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது மிகப்பெரிய கால்பந்தாட்ட தொடர்

Report Print Dias Dias in கால்பந்து

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 12 அணிகள் பங்கேற்கவுள்ளன.

போட்டியில் பங்குபற்றும் கழகங்கள் அனைத்தும் ஒன்றையொன்று லீக் சுற்றில் எதிர்த்தாடவுள்ளன.

இதன் பிரகாரம் மொத்தம் 61 போட்டிகள் நடைபெறவுள்ளன.

லீக் சுற்று முடிவில் புள்ளிகள் நிலையில் முதல் நான்கு இடங்களை அடையும் அணிகள் இறதிச் சுற்றில் விளையாட தகுதி பெறும்.

இதில் இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியும், இரண்டாம் இடம்பெறும் அணியும் மிகப் பெரிய பரிசுத் தொகைகளுக்கு சொந்தக்காரர்களாவர்.