மாதோட்டம் அணியை வீழ்த்தியது அம்பாறை அவென்ஜஸ்!

Report Print Dias Dias in கால்பந்து

மாதோட்டம் மற்றும் அம்பாறை அவென்ஜஸ் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் மாதோட்டம் அணியை அம்பாறை அவென்ஜஸ் அணி தோல்வியடையச் செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது பருவகால வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டி" (NEPL) கோலாகரமாக ஆரம்பமாகியுள்ளது.

இந்த சுற்றுப்போட்டி 60 லீக் போட்டிகளை கொண்டதாக அமைய இருக்கின்றது. இன்று மூன்று போட்டிகள் வடக்கு கிழக்கில் உள்ள வவுனியா மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இந்த போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் NEPL குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, வவுனியா நகரசபை மைதானத்தில் தற்பொழுது போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இப் போட்டியில் மாதோட்டம் அணியும் மற்றும் அம்பாறை அவென்ஜஸ் அணியும் மோதின.

அம்பாறை அவென்ஜஸ் அணி நான்குக்கு மூன்று என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்றதற்காக அந்தணி 25 ஆயிரம் ரூபா பணப்பரிசினை பெற்றுள்ளது.