விளையாட்டு வீரர்களை திட்டமிட்டு பழிதீர்த்த டெலோ முக்கியஸ்தர்?

Report Print Dias Dias in கால்பந்து

தமிழர் தாயகத்திலுள்ள கால் பந்தாட்ட வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்து அவர்களுக்கு சர்வதேச வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் கால் பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் மன்னார் fc அணியின் உரிமம் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் முன்னாள் உரிமையாளரால் மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் NEPL எனப்படும் வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் கால் பந்தாட்ட தொடரில் விளையாடுவதற்கு மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் வீரர்களுக்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் அதன் நிர்வாகத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்து.

அத்துடன் லீக்கின் நிர்வாகத்தை சேர்ந்த எவரும் இந்த தொடரில் பங்குபற்றக் கூடாது எனவும் லீக்கின் நிர்வாக சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக் கூறியிருந்தது.

இந்த நிலையில் லீக்கின் தீர்மானத்திற்கு கட்டுப்படாமல் செயற்பட்டார் என தெரிவித்து மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் உபதலைவரும், போட்டி குழுவின் தலைவரும். ஒழுக்காற்றுக் குழுவின் உறுப்பினருமான ஜி.டிக்கோணிங்கிற்கு உரு வருட தடை விதிக்கப்படுவதாக மன்னார் மாவட்ட கால் பந்தாட்ட லீக் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் லீக்கின் நிறைவேற்று குழுவின் தீர்மானத்திற்கு அமைய ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்க மன்னார் மவாட்ட கால் பந்தாட்ட லீக்கின் நிர்வாகத்திலிருந்தும், நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கால் பந்தாட்ட லீக் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை மன்னார் fc மற்றும் வல்வை fc அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் கால் பந்தாட்ட தொடரில் விளையாடும் சுமார் 20 வீரர்களுக்கு தலா ஒரு வருட தடையும், இருபதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படுவதாக மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் மன்னார் fc அணியை சேர்ந்த 16 வீரர்களுக்கும், தமிழ் யுனைடட் அணி சார்பில் இரு வீர்களுக்கும். மாதோட்டம் fc அணியில் ஒரு வீரருக்கும் என 19 பேருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இனிவரும் காலங்களில் நிர்வாகத்தின் தீர்மானங்களை மீறி செயற்படும் பட்சத்தில் வீரர்களுக்கான தண்டனைகள் இரட்டிப்பாக்கப்படும் எனவும் மன்னார் மாவட்ட லீக்கினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சர்வதேச ரீதியில் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தப்படும் இந்த தொடரில் பங்குபற்றும் வீரர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு தடை விதிக்க முடியாது என இலங்கையில் கால் பந்தாட்டத்தை நிர்வகிக்கும் கால் பந்தாட்ட சம்மேளனம் அறிவித்திருந்தது.

அவ்வாறான தடைகள் விதிக்கப்படுமாயின் தமது கவனத்திற்கு நேரடியாக கொண்டு வருமாறும் இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விடயங்களின் பின்னணியில் மன்னார் நகரசபை தலைவர் செயற்படுவதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், டெலோவை பிரதிநிதித்துவப்படுத்தும் அவருக்கு டெலோவின் தவைரான செல்வம் அடைக்கலநாதன் அறிவுரை கூற மாட்டாரா?

தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக மக்கள் மத்தியில் போல் நிற்கும் டெலோ இந்த விடயத்தில் என்ன பதில் சொல்லப் போகிறது? என கேள்வியெழுப்பியுள்ளனர்.