விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகள்! சுப்பர் 8 இற்குள் நுழைய உள்ள அணிகள் எவை?

Report Print Sujitha Sri in கால்பந்து

வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் சுப்பர் 8 இற்குள் நுழைய உள்ள அணிகளைத் தீர்மானிக்கும் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

60 போட்டிகளைக் கொண்ட இந்த சுற்றுத் தொடரில் நேற்றுடன் 39 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

அந்தவகையில் இன்றையதினம் 15ஆவது நாளாக மூன்று போட்டிகள் நடைபெற்றிருந்தன.

இன்றையதினம் பி பிரிவில் திருமலை ஏகாம்பரம் மைதானத்தில் றிங்கோ ரைற்றான்ஸ் அணியை எதிர்த்து பலம் வாய்ந்த வல்வை எப்.சி அணி மோதியிருந்தது.

யாழ். துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் கிளியூர் கிங்ஸை எதிர்த்து தமிழ் யுனைட்டட் அணி 1:0 என்ற கோலை பெற்றநிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

அதேபோன்று திருமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் றிங்கோ ரைற்றான்ஸ் அணியை எதிர்த்து மோதும் பலம் வாய்ந்த வல்வை எப்.சி அணி 0:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்க முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

முல்லைத்தீவு இரணைப்பாலை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முல்லை பீனிக்ஸ் மற்றும் மன்னார் எப்.சி அணிகள் 1:1 என்ற கணக்கில் கோல்களை போட்டு சமநிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.