இன்றைய தினம் யாழில் விறுவிறுப்புடன் ஆரம்பமாகும் அரையிறுதிப் போட்டிகள்

Report Print Gokulan Gokulan in கால்பந்து

ஐ.பி.சி தமிழின் பிரதான அனுசரணையில் வடக்கு, கிழக்கு பிறிமீயர் லீக் 2019ஆம் ஆண்டிற்கான சுற்றுப்போட்டியின் இரண்டாவது பருவ காலத்திற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எனினும் 60 லீக் முறை சுற்றுப்போட்டிகளும் நிறைவடைந்த நிலையில், அபார திறமையை வெளிப்படுத்திய 8 அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

இந்த நிலையில் அரையிறுதிப் போட்டிகளின் ஆரம்ப போட்டியானது யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் மாலை ஏழு மணிக்கு இரு அணிகள் குறித்த மைதானத்தில் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பலப்பரீட்சை செய்யவுள்ளன.