உதைப்பந்தாட்டத்தில் மாபெரும் சமர்! வெற்றி வாகை சூடி ஐம்பது லட்சத்தை தட்டிச் சென்றது ரில்கோ கென்கியூரஸ்

Report Print S.P. Thas S.P. Thas in கால்பந்து

வட கிழக்கின் மாபெரும் உதைப்பந்தாட்டப் போட்டியான பிறீமியர் லீக்கில் ரில்கோ கென்கியூரஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனமானது தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை இணைத்து NEPL பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்தது.

பல சுற்றுக்களாக நடந்த இப்போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று யாழ்.துரையப்பா மைதானத்தில் இரவு 8 மணிக்கு மின்னொளியில் மாபெரும் இறுதிப்போட்டி ஆரம்பமாகியது.

இன்றைய ஆட்டத்தில் ரில்கோ கென்கியூரஸ் அணியை எதிர்த்து வல்வை எப்.சி அணி மோதிய நிலையில் இரண்டு அணிகளும் 1 : 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டி முடிந்தது.

இந் நிலையில் பனால்டி முறையில் ரில்கோ கென்கியூரஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது. பனால்டியின் போது 5 : 4 என்ற கோல் கணக்கில் ரில்கோ கென்கியூரஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

முதல் போட்டியில் இருந்து இறுதிவரை இடம்பெற்ற போட்டியில் ரில்கோ கென்கியூரஸ் அணி எந்த போட்டியிலும் தோல்வி அடையவில்லை என்பது விஷேட அம்சம்.

இந்த வெற்றியின் மூலம் ஒரு கோடி பரிசு தொகையில் முதலாம் பரிசாக ரூபா 50 லட்சத்தை ரில்கோ கென்கியூரஸ் அணி தட்டிச்சென்றுள்ளது.

இப்இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீலங்காவின் பிரபல துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.