தமிழ்வின் இன் அம்­பாறை அவஞ்­சர்ஸ் அணியை வீழ்த்தி வாகை சூடிய லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

வடக்கு -– கிழக்கு பிறி­மி­யர் லீக் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் தமிழ்வின் இன் அம்­பாறை அவஞ்­சர்ஸ் அணியை எதிர்த்து லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி மோதி­யது.

முதல் முப்­பது நிமி­டங்­கள் வரை­யில் இரண்டு அணி­க­ளா­லும் கோல்­கள் எவை­யும் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை.

34ஆவது நிமி­டத்­தில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி­யின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் ரகு­மான்.

36ஆவது நிமி­டத்­தில் இரண்­டா­வது கோலைப் பதி­வு­செய்­தார் ரிப்­கான்.

முதல் பாதி­யின் முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி முன்­னிலை பெற்­றது.

இரண்­டா­வது பாதி­யில் அதா­வது ஆட்­டத்­தின் 67ஆவது நிமி­டத்­தில் ரிங்கோ ரைரன்ஸின் மூன்­றா­வது கோலைப் பதி­வு­செய்­தார் ரிப்­கான்.

தற்­போது நிலமை 3:0. அதன் பின்­னர் அபா­ரப் போராட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யது தமிழ்வின் இன் அம்­பாறை அவஞ்சர்ஸ் அணி.

87ஆவது நிமி­டத்­தில் அஸ்­கார், அடுத்த சில நிமி­டங்­க­ளில் காசிம் இரு­வ­ரும் அம்­பாறை அவஞ்­சர்­ஸின் சார்­பில் அடுத்­த­டுத்­துக் கோல்­க­ளைப் பதி­வு­செய்­த­னர்.

எனி­னும் ரிங்கோ ரைரனின் வெற்­றி­யைப் பறித்­து­விட முடி­ய­ வில்லை.

முடி­வில் 3:2 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது ரிங்கோ ரைரன்.

சிறந்த வீர­ராக ரிங்கோ ரைரனின் ரிப்­கான் தெரி­வா­னார்.