இறுதிப்போட்டியில் தமிழ்யுனைடட்டை பந்தாடிய அம்பாறை அவெஞ்சர்!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் இறுதி சுற்றான 11ஆம் சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிவடைந்திருக்கிறது.

இந்த சுற்றில் வெற்றி பெற்றால் தான் பல அணிகளுக்கு அடுத்த சுற்றுக்குள் நுளைவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால் இந்த சுற்று பல அணிகளுக்கு முக்கியத்துவம்வாய்ந்ததாக காணப்படுகிறது.

துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற்ற 1ஆவது போட்டியில் தமிழ்யுனைடட் அணியை எதிர்த்து அம்பாறை அவெஞ்சர்ஸ் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் அம்பாறை அணி 03:01 என்ற கோல் கணக்கில் பலம்மிக்க தமிழ் யுனைடட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் தமிழ்யுனைடட் அணி சார்பாக இசாக் 90 ஆவது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.

அம்பாறை அணி சார்பாக ஹனான் 17, 53 ஆவது நிமிடங்களில் நுபாசிஸ் 39 ஆவது நிமிடத்திலும் வெற்றிக் கோல்களை பதிவு செய்தனர்.

NEPL தொடரில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் முதல் அணியாக ரில்கோ FC அணியும் இரண்டாவது அணியாக கிளியூர் கிங்ஸ் அணியும் 3, 4 ஆவது அணிகளாக வல்வை FC மற்றும் மன்னார் FC அணிகள் பிளேஓவ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இன்று 20/08/2018 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதலாவது பிளேஓவ் ஆட்டத்தில் ரில்கோ FC அஊணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.