பிரான்ஸ் பொலிசாரால் தேடப்படும் 4 இலங்கைத் தமிழர்கள்

Report Print Dias Dias in பிரான்ஸ்

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிறுவர்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

சுமார் 40பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் சிலர் மயக்கம் அடைந்தனர் என்றும் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பேசிக்கொண்டிருந்த போதே அங்கு வந்திருந்த நான்கு பேர் நச்சுவாயு கலந்த சக்தி வாய்ந்த கண்ணீர்புகையை பிரயோகித்து பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரும் பிரான்ஸில் உள்ள ஒரு நபரின் ஏற்பாட்டில் தான் மண்டபத்திற்குள் நச்சுவாயு கலந்த கண்ணீர்புகையை தமது உடைகளுக்குள் மறைத்து கொண்டுவந்தார்கள் என்று பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரனைகளை முன் எடுத்துள்ளதுடன் இதனுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப் படுமானால் வதிவிட உரிமை பறிக்ப் பட்டு நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்படும் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments