தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான (Grippe) மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருகின்றது.
இவர்களுக்கான தடுப்பு ஊசிகள், மருத்துவக் காப்புறுதியினால் வழங்கப்பட்டு, அவை செலுத்தப்பட்ட பின்னும் கூட இந்தத் தொற்று அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயானது முக்கியமாக முதியவர்களை தாக்கி வருவதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக எசொன் (Essonne) மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் அரச வைத்தியசாலையில் வைத்தியர்களின் தொகை குறைவாக உள்ள நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது.
குறிப்பாக 240 பேர் சிகிச்சைபெறும் நிலையில் கடந்த வார இறுதியில் இந்தத் தொகையானது 280 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக எசொன் (Essonne) மாவட்த்தின் அரசினர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவுகள் மிகவும் நெருக்கடிக்குத்தள்ளப்பட்டுள்ளது.