பிரான்ஸில் அப்பாவாகவிருக்கும் ஆண்களுக்காக வருகிறது புதிய சட்டம்!

Report Print S.P. Thas S.P. Thas in பிரான்ஸ்
576Shares

பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டில் தந்தையாகவிருக்கும் ஆண்களுக்கு ஆதரவாக சட்டம் ஒன்றை இயற்றவிருக்கின்றது.

பெரும்பாலான நாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை பெற்றால் அவர்களுக்கு தங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ள மற்றும் குழந்தையை பராமரித்து கொள்ளவும் சிறிது காலம் விடுமுறை அளிக்கப்படும்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் தந்தையாகும் நபர்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அதன்படி இந்த சட்டம் அமலுக்கு வந்தால் 11 நாள் தொடர் விடுப்பு விட்டு விட்டு வரும் அல்லது ஆறு வார தொடர் விடுப்பை தந்தையாகும் ஆண்கள் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பாக ஆண்கள் வீட்டு வேலைகளை செய்ய பழக வேண்டும் என்பதோடு தங்கள் குழந்தைகளை பராமரிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் ஆண்களை விட பெண்கள் 33 சதவீதம் குறைவான நேரமே பணியில் ஈடுபடுகிறார்கள்.

இதுவொருபுறமிருக்க, ஆண்களை விட 25 சதவீதம் குறைவாக சம்பாதிக்கும் பெண்கள் வீட்டு வேலைகளை ஆண்களை விட 71 சதவீதம் அதிகம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments