பாரிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்டகாசம்

Report Print Murali Murali in பிரான்ஸ்

பாரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது. பாரிஸ் 13ஆம் வட்டாரத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை தேடி பொலிஸார் வந்திருந்த போது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கோள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் சிறிய காயங்களுடன் பொலிஸ் அதிகாரி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் தங்யிருந்து குடியிருப்பில் இருந்து 70 ஆயிரம் யூரோக்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா போதைப்பொருள் கடத்தல் குழுவை சேர்ந்த மேலும் 6 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments