பாரிசில் தீவிரவாத தாக்குதல்: ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

Report Print Murali Murali in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிசின் ஒபெரா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்நாட்டு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

மக்கள் நடமாட்டம் மிக்க ஓர் பகுதியில் இந்த தாக்குதல் சம்வம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.