உலகக் கிண்ண உதைபந்தாட்டம்! 20 வருடங்களின் பின்னர் அபார வெற்றியை பதிவு செய்த பிரான்ஸ்

Report Print Vethu Vethu in பிரான்ஸ்

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அபார வெற்றி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன்மூலம் இரண்டாவது தடவையாகவும் பிரான்ஸ் உலகக் கிண்ண சம்பியனாகி உள்ளது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் குரேஷிய அணிகள் மோதின.

இன்றைய போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குரேஷியா இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.

1998ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் பிரான்ஸ் சம்பியனானது. 20 வருடங்களின் பின்னர் இன்று இரண்டாவது தடவையாகவும் சம்பியனாகி சாதனை படைத்துள்ளது.

இந்த உலகக் கிண்ண போட்டியில் முக்கியமான பல அணிகள் தெரிவு போட்டியின் போது வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.