பிரான்ஸிலிருந்து இன்று நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்!

Report Print Vethu Vethu in பிரான்ஸ்

பிரான்ஸின் அரச நிர்வாகத்திற்குட்பட்ட ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

பிரான்ஸ் ரீயூனியன் தீவிற்கு சென்று பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் ஏழு பேர் இருந்தார்கள் என்பதனை கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்ம்பிரிய திசேர உறுதிப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பிரான்ஸ் ரீயூனியன் தீவில் குடியேறுவதற்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers