பரிஸில் பகுதியில் பாரிய வெடிப்பு! இருவர் பலி - 37 பேர் காயம் - பலர் ஆபத்தான நிலையில்...

Report Print Vethu Vethu in பிரான்ஸ்

பிரான்ஸில் பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளர்.

எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மத்திய பரிஸில் சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பலர் சம்பவத்தில் காயமடைந்த போதிலும் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் போராடிக் கொண்டிருப்பதாக பொலிஸ் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முழுமையான கட்டடம் இந்த சம்பவத்தினால் சேதமடைந்துள்ளதுடன் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிந்திய செய்தி

வெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்ட தீ விபத்தினை தடுக்க முயற்சித்த இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.

எரிவாயு கசிவினால் பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக 37 பேர் காயமடைந்துள்ளதுடன் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் 9 பகுதியில் ஒரு சில இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers