பிரான்ஸ் ஈபிள் கோபுரத்திற்கு அருகில் பாரிய தீ விபத்து - 7 பேர் பலி - 24 பேர் காயம்

Report Print Vethu Vethu in பிரான்ஸ்

பிரான்ஸில் வீட்டுக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகரான பரிஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி அதிகாலையில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டு மாடிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் இவ்வாறு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த குடியிருப்பினும் 7 மற்றும் 8வது மாடியில் இடம்பெற்ற தீ விபத்தினால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என தீயணைப்பு பிரிவு பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கிருந்து அதிகமானோர் வெளியேற்றப்பட்ட போதிலும் சிலர் சிக்கியிருப்பதாக சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதி முழுவதும் புகைமூட்டத்தினால் நிறைந்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை வரை 200 தீயணைப்பு வீரர்கள் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்த போராடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Eiffel கோபுரம் உட்பட சுற்றுலா பயணிகளுக்கு பிரபலமான தளங்கள், கடைகள் மற்றும் உணவங்கள் அவ்விடத்தில் அமைந்துள்ளது.