பிரான்ஸில் வைத்து புலம்பெயர் சமூகத்திடம் விடுக்கப்பட்டுள்ள ஓர் கோரிக்கை

Report Print Nesan Nesan in பிரான்ஸ்

புலம்பெயர் சமூகம் தமிழர் விடயத்தில் ஒரே குரலாக ஒற்றுமையுடன் செயற்பட்டு இந்த விடயத்தை சர்வதேச மயப்படுத்தும் வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் நவநீதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் தற்போது ஈழத்தில் வாழும் தமிழர்களின் உண்மை நிலை என்ன என்பது தொடர்பில் பிரான்ஸ் நாடாளுமன்ற கட்டட தொகுதியின் பக்க அறையொன்றில் நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் பாராளுமன்றத்தின் தமிழர் விவகாரங்களுக்கான உப குழுவின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடலானது நடைபெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் நிலைமாறு கால நீதி மற்றும் ஈழத்தில் வாழும் மக்களின் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்காக பல தமிழ் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போதே மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் நவநீதன் மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.