பிரான்சில் பற்றியெரியும் வரலாற்று புகழ்மிக்க நோறெ டாமே தேவாலயம்!! ( LIVE)

Report Print Murali Murali in பிரான்ஸ்

சர்வதேச ரீதியில் பிரபல்யமான பாரிஸ் நகரில் அமைந்துள்ள நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தேவாலயம் முழுவதும் பரவிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.

தேவாலயத்தின் சிகரம் தற்போதுமறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதால், இந்த விபத்துக்கு அதுவும் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எனினும் தீயினைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்படையினர் கடுமையாக போராடி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.