பரிஸில் நபர் ஒருவர் வெறியாட்டம்! நான்கு பேர் வெட்டிக்கொலை

Report Print Vethu Vethu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள மத்திய பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே நபர் ஒருவர் கத்தியால் குத்தி நான்கு பொலிஸ் அதிகாரிகளை கொலை செய்துள்ளார்.

இந்த கட்டடத்திற்குள்ளே பணியாற்றியவர் எனக் கூறப்பட்ட நபரே இந்த செயலை செய்துள்ள நிலையில், அவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பரிஸின் மையத்தில் உள்ள île de la Cité பகுதி முழுமையாக சுற்றிவளைத்து பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நேரப்படி இன்று ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் அதிகாரிகள் மீதான வன்முறைகளை அதிகரித்தல் மற்றும் இராணுவத்தினரின் தற்கொலை விகிதங்கள் அதிகரிப்புக்கு எதிராக நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castane சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.