பாரிஸ் நகரில் கத்தி குத்து தாக்குதல்! பலர் காயம்

Report Print Murali Murali in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பூங்காவில் கத்தி குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அதேவேளை கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.