பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் இளைஞன்

Report Print Vethu Vethu in பிரான்ஸ்

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்தமை அவரின் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெல்லிப்பழையை சேர்ந்த 29 வயதான பகீஸ்வரன் சாருஜன் என்ற இளைஞன் மூளை நரம்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் உடல் உறுப்புகள் பிரான்ஸிலுள்ளவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் திடீரென மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பகீஸ்வரன் சாருஜன் தனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவதாக ஏற்கனவே பதிவு செய்திருந்தார்.

இதன் காரணமாக அவரின் உடல் உறுப்புக்கள் எட்டுப் பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.

மூளைச் சாவடைந்த நிலையில், உறவினர்களுடன் அனுமதியுடன் பகீஸ்வரன் சாருஜன் கருணை கொலை செய்யப்பட்டதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.