பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ். இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

Report Print Nesan Nesan in பிரான்ஸ்

இலங்கையை சேர்ந்த நபரொருவர் பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோய் தாக்கத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடலை குடும்பத்தாரிம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32).

யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குறித்த இளைஞர் பிரான்சில் கிறித்தை பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணியும் ஆவார்.

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார். இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்க மறுத்துவிட்டனர்.

இவரது பிரிவினால் குடும்பத்தினர் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்த கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் பிரான்சிலும் தமிழர்கள் பலர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.