பிரான்ஸில் பெரும் சோகம்! ஒரே நாளில் 1355 ஆல் அதிகரித்த மரணத் தொகை

Report Print Vethu Vethu in பிரான்ஸ்

பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மரணத் தொகை 1355 ஆல் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒருநாளில் வெளியிடப்பட்ட அதிகபடியாக எண்ணிக்கை இதுவென கவலை வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 509 மரணங்கள் பதிவான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் வைத்தியசாலைகளிள் இறந்துள்ளதாகவும், அண்மைக் காலங்களில் வயோதிபர் பராமரிப்பு நிலையங்களில் 884 பேர் இறந்துள்ளதாகவும் பிரதம வைத்திய ஆலோசகர் Director General of Health, Jérôme Salomon தெரிவித்தார்.

பிரான்ஸில் வைரஸ் தாக்கம் காரணமாக 59 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 400 பேர் பூரண குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 387. ஆபத்தான நிலையில் 6 ஆயிரத்து 399 பேர் உள்ளனர்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர்.