கொரோனாவை குணப்படுத்த கடலட்டையின் இரத்தம்

Report Print Tamilini in பிரான்ஸ்

கொடிய வைரஸான கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் வேகமாக தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அது எவ்வாறு பரவுகின்றது, யாரால் பரவுகின்றது, எங்கு பரவுகின்றது, தொற்றினால் எவ்வாறு இருக்கும் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகள் பதில்கள் ஒருபுறமிருக்க அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் என தனியாகவோ இல்லை ஒரு அமைப்பாகவோ அக்கறை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடல் அட்டையின் இரத்தத்தின் மூலம் குணப்படுத்தலாம் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலட்டையின் இரத்தம் கொரோனா நோளிகளிற்கான புதிய மருந்தாகப் பாவிக்கப்பட உள்ளது.

கொரோனா நோயின் தீவிரத்தால், சுவாசச் சிக்கல் ஏற்பட்டு, ஒக்சிஜனின் அளவு பெருமளவு குறைவதால் சாவு ஏற்படுகின்றது. இதற்கு ஏற்ற புதிய மருந்தாகவே கடலட்டையின் இரத்தம் உபயோகப்படுத்தப்பட உள்ளது.

மனிதனின் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் உருவாக்கும் ஒக்சிஜனின் அளவை விட நாற்பது மடங்கு ஒக்சிஜனை கடலட்டையின் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் உருவாக்குவதாக அறியப்பட்டுள்ளது.

மனித உடலில் இந்த இரத்தம் ஏற்றப்பட்டுத் துல்லியமான பெறுபேறுகளும், சுவாசம் சீரானமையும் உறுதிப்படுத்பட்டுள்ளது.

இந்தச் சிகிச்சை முறையை, பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான நிறுவனமான ANSM, மற்றும் தனிமனிதப் பாதுகாப்பிற்கான ஆணையமான CPP ஆகியவை அங்கீகரித்துள்ளன.