கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது! பிரான்ஸ் அறிவிப்பு

Report Print Murali Murali in பிரான்ஸ்

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா தொற்று பிரான்ஸில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை அந்நாட்டு அரசின் அறிவியல் ஆலோசனைக் குழு இன்று வெளியிட்டுள்ளது.

“கொரோனா வைரஸ் இன்னும் சில மாகாணங்களில் பரவிக் கொண்டு இருக்கிறது. எனினும், அதன் வீரியம் குறைந்துள்ளது. கொரோனா தற்போது பிரான்ஸின் கட்டுக்குள் உள்ளது.

வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு தொற்று என்ற அளவில் தொற்று குறைந்துள்ளது” என பிரான்ஸ் அரசின் அறிவியல் ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக பிரான்ஸில் கொரோனா தொற்று வேகமாக பரவியிருந்த நிலையில், கடந்த நான்கு வாரமாக வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.

இதேவேளை, பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 153,055 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,111 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.