கொரோனா தொற்றால் ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரான்ஸ் - தமிழர்கள் அதிகம் வாழும் பரிஸ் நகரின் நிலை

Report Print Vethu Vethu in பிரான்ஸ்
897Shares

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பிரான்சில் இரண்டாம் தொற்றலை மிகவும் மோசமாகத் தாக்கி வருகின்றது. தொற்றுக்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றினால் 329 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது நேற்றைய எண்ணிக்கையிலும் 42 ஆயிரத்து 536 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 35 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் 40 ஆயிரத்திற்கும் 60 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட பெறுமானத்தில் வந்து கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 4879 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 351 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் தொற்றும் உயிரிழப்புகளும் மேலும் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் பரிஸில் வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளர்களால் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரிஸிற்க்குள் 84% வீத அவசர பிரிவு கட்டில்களும், இல் து பிரான்சுக்குள் 97.6% வீத அவசர பிரிவு கட்டில்களும் நிரப்பப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை இல் து பிரான்சுக்குள் 2255 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 536 என்பது குறிப்பிடத்தக்கது.