பிரான்ஸில் சினிமா பாணியில் நடந்த திகில் சம்பவம்

Report Print Vethu Vethu in பிரான்ஸ்
519Shares

பிரான்ஸில் தீ விபத்து ஒன்றில் இருந்து தப்பிக்க சிறுவன் ஒருவன் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து குதித்துள்ளான்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவ்லின், முரோ நகரில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் பலத்த தீ பரவியுள்ளது. அவ்வீட்டில் 12 வயதுடைய சிறுவன் ஒருவனும், அவனது 10 வயது தங்கையும் இருந்துள்ளனர். தாதியாக பணிபுரியும் அவர்களது தாயார் இரவு நேர பணிக்கு சென்றிருந்தார். இதனால் தீக்குள் அவ் இரு சிறுவர்களும் சிக்கிக்கொண்டனர்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னர், அக்கட்டிடத்தில் வசித்த சிலர் அவர்கள் தப்பிக்க ஏற்பாடு செய்தனர். பஞ்சு மெத்தை ஒன்றை வைத்து அதன் மேல் குதிக்க அறிவுறுத்தினர். முதலில் சிறுவன் அங்கிருந்து மெத்தை மீது குதித்துள்ளான். இலேசான காயங்களுடன் அவன் தப்பித்துக்கொண்டான்.

அவனது தங்கை குதிக்க முற்பட்டதுக்குள் தீ வேகமாக பரவியுள்ளது. சில நிமிடங்கள் கழித்து சிறுமியை தீயணைப்பு படையினர் காப்பாற்றினர். சிறுமி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அர்மண் ட்ரஸ்ஸோ மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.