பிரித்தானியாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல்! பிரான்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியாகியுள்ள தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
703Shares

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திற்குப் பிறகு, பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களையும் புகையிரதங்களையும் நிறுத்துவது குறித்து பிரான்ஸ் ஆலோசித்து வருவதாக உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

bfmtv வெளியிட்ட தகவல்களின்படி, பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களையும் புகையிரதங்களையும் நிறுத்தி வைப்பது குறித்து பிரான்ஸ் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் ஐரோப்பிய ஒருங்கிணைப்பை எதிர்பார்த்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் bfmtv செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா தலைநகர் லண்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக சுலபமாக பரவி வருவதாகவும், அது கட்டுப்பாட்டில் இல்லை என அந்த நாட்டு சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென்கிழக்கு ஆகிய பகுதியகளில் புதிய 4 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களை தடை செய்வதாக ஐரோப்பிய நாடான நெதர்லாந்து அறிவித்தது.

இதை தொடர்ந்து பெல்ஜியம் அறிவித்தது, ஜேர்மனியும் பிரித்தானியாவுக்கான தடையை விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


You May Like This Video...