முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் மக்கள் போராட்டம்

Report Print Dias Dias in பிரான்ஸ்
98Shares

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாகவும் ,பல்வேறு அமைப்புக்கள், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் எழுந்த பெரும் கண்டனத்தையடுத்து துணைவேந்தரால் இடிக்கப்பட்ட தூபியை மீண்டும் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முள்ளிவாய்காலில் உயிர் நீத்த பொதுமக்களை நினைவு கூரும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபி இரவோடு இரவாக அகற்றப்பட்டமைக்கு பல நாடுகளிலிருந்தும் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.