ஜேர்மனியிலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கப்பட்ட யுவதி

Report Print Vethu Vethu in ஜேர்மனி

ஜேர்மனியிலிருந்து வலுக்கட்டாயமாக யுவதி ஒருவரை இலங்கைக்கு அழைத்து வர முயற்சித்த நிலையில் அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வலுக்கட்டாயமாக 21 வயதான யுவதியை திருமணத்திற்காக இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கப்பட்டுள்ளது.

எனினும் இறுதிநேரத்தில் விமானத்தில் வைத்து ஜேர்மன் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த யுவதியின் விருப்பத்திற்கு மாறாக அவரைத் திருமணம் செய்து கொடுக்கும் நோக்கில் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு வருவதற்காக விமானம் ஏறியுள்ளனர்.

எனினும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் யுவதி செயற்பாடுகளை அவதானித்த விமான நிலைய பொலிஸ் அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அனுமதி பெற்ற குறித்த பொலிஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட யுவதியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அப்போது தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக யாரோ ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைப்பதற்காக குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதாக யுவதி தெரிவித்துள்ளார்.

அதன் பின் உடனடியாக யுவதியை அழைத்துச்சென்ற பொலிஸ் அதிகாரி பெண்களுக்கு புகலிடம் வழங்கும் இடம் ஒன்றில் ஒப்படைத்திருக்கிறார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக 21 வயதுடைய யுவதியின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

German police officer rescues woman from forced marriage

Latest Offers

loading...