இலங்கை தமிழருக்கு சிறைத் தண்டனை விதித்த ஜேர்மன் நீதிமன்றம்

Report Print Jeslin Jeslin in ஜேர்மனி

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை தமிழர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினரான ஜீ.நவனீதனுக்கு, 82 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஜேர்மனியில் குடியேறிய குறித்த இலங்கையர், அகதி அந்தஸ்த்து கோரியுள்ளதாக ஜேர்மன் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஜீ.நவனீதன், ஜேர்மன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்கமார் கொலைக்கு தொடர்புடையவர் என ஜேர்மன் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers