ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தை அசுர வேகத்தில் இடித்து தள்ளிய கார் - 30க்கு மேற்பட்டோர் காயம்

Report Print Murali Murali in ஜேர்மனி

மேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரை மோத செய்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவம் ஜேர்மனியில் (Volkmarsen) போக்மாசனில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பலர் குழந்தைகள் எனவும், அவர்களில் சிலர் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய ஜேர்மன் பிரஜையான காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு திட்டமிட்ட செயல் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தாக்குதலின் நோக்கம் தெளிவாக தெரியவில்லை எனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.