தொடர்ச்சியாக பத்தாம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய மனிதநேய ஈருருளிப்பயணம்

Report Print Dias Dias in ஜேர்மனி
32Shares

தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகிய நிலையில் பத்தாவது நாளான இன்று Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் Saarbrücken மாநகரசபையில் காலை 9 மணியளவில் முதல்வரினை சந்திந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மனுவும் கையளிக்கப்பட இருக்கின்றது.

அதனை தொடர்ந்து France நாட்டினுள் காலை 10 மணிக்கு உள்நுளைந்து பல அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொள்ள இருக்கின்றார்கள் மனிதநேய ஈருருளிப்பயண போராளிகள்.