நல்லூர் கோயில் பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்!

Report Print Samy in ஆரோக்கியம்
1302Shares

நல்லூர் கோயில் உற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உணவு பழுதடைந்தமையின் காரணமாக இரு பொலிஸார் மயங்கி விழுந்தனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்து சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸாரே இவ்வாறு மயக்கமடைந்தனர்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பழுதடைந்ததாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்ட போதிலும் பலனளிக்கவில்லை.

நல்லூர் கோயில் வளாக பாதுகாப்பிற்காக சுமார் 720 க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கோயில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு மதிய உணவாக பனிஸ் மாத்திரம் வழங்கப்பட்டமையை பலரும் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்கத்கது.

Comments