டெங்கு அச்சுறுத்தலுக்குள் சிக்கியுள்ள இலங்கை ஸிக்காவிலிருந்து தப்புமா?

Report Print Vethu Vethu in ஆரோக்கியம்
62Shares

உலகளாவிய ரீதியில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இணையாக வைரஸ் தாக்கங்களின் தீவிரம் வலுவடைந்துள்ளது.

இந்நிலையில் டெங்கு நோய் பரவுவதனை இன்னமும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாதுள்ள நிலையில் நுளம்பு ஊடாக பரவும் ஸிக்கா வைரஸ் காய்ச்சல் இலங்கையிலும் பரவுவதற்கான ஆபத்துகள் ஏற்பட்டுள்ளது.

பிரேசில் உட்பட தென் அமெரிக்க நாடுகளில் பரவுவதற்கு ஆரம்பமாகியுள்ள இந்த நோய், தற்போது மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகின்றமை இலங்கைக்கும் இந்த நோய் பரவ காரணமாகியுள்ளது.

கர்ப்பிணி தாய்மர்களுக்கு தொற்றும் போது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துகின்ற இந்த நோய் சாதாரண நபரை தொற்று போதும் பெரியதான சிக்கல்களை ஏற்படுத்தாத போதிலும், அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனால் டெங்கு நோயை விடவும் தீவிரமடையும் என்ற கருத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது.

தற்போது வரையில் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு உலக சுகாதார மையத்தின் ஆலோசனைக்கமைய ஸிக்கா நோய் தொற்று உள்ள நாடுகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டில் இருந்து தென் அமெரிக்கா நாடுகள் உட்பட 72 நாடுகளுக்கு பரவியுள்ள ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர், இன்னொருவருடன் பாலியல் ரீதியாக இணையும் போது இந்த நோய் பரவக்கூடும் என தற்போது வரையில் விஞ்ஞான ஆய்வுகள் ஊடாக உறுதியாகியுள்ளது.

“ஸிக்கா வைரஸ்” காய்ச்சலை 1947 ஆம் ஆண்டு முதல் முறையாக உகாண்டாவில் “ரீஸஸ்” (recess) குரங்குகள் தொகுப்புகள் மூலமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் 1952ஆம் ஆண்டு உகாண்டா மற்றும் தன்சானிய பிரஜைகளுக்கு இடையில் பரவியுள்ள நிலையில் அங்கிருந்த ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசுபிக் தீவுகளுக்கும் இந்த நோய் மக்களுக்கு இடையில் பரவிச் சென்றுள்ளது.

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸிக்கா நோய் பரவுவதாக முதல் முதலில் தென் அமெரிக்க நாடான சிலியில் பதிவாகியது. இந்த நோய் இந்த வருடம் பிரேசில், கொலம்பியா மற்றும் அதற்கு அருகில் உள்ள பல தென் அமெரிக்க நாடுகளுக்கு வேகமாக பரவுவதாக பதிவாகியுள்ள நிலையில், ஆசிய நாடுகளில் முதல் முறையாக சிங்கப்பூரில் பதிவாகியது.

தற்போது வரையில் பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இந்த நோய் பரவுகின்ற நிலையில் சிங்கப்பூரில் மாத்திரம் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 300 நோயளிகள் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸிக்கா நோய் இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளில், டெங்கு நோயை பரப்பும் ஈடிஸ் என் நுளம்பின் ஊடாக ஸிக்கா பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈடிஸ் நுளம்பு விசேடமாக காலை, பகல் மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை தாக்குகின்ற நிலையில் இது மக்கள் வாழும் பகுதி மற்றும் அதற்கு வெளிப்பகுதிகளில் வாழும் விசேட நுளம்பாகும். முக்கியமாக “ஈடிஸ் பஈஜிப்டை” (female Aedes) என்ற பெண் நுளம்பின் ஊடாக இந்த ஸிக்கா வைரஸ் தொற்று பரவுகின்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் ஒருவரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு டெங்கு நோய் தொற்று முறையிலேயே தொற்றும் என தெரிவிக்கப்படுகின்றது. அப்படி என்றால் நுளம்பு, நோய்யுற்ற ஒருவரின் இரத்தத்தை உறிஞ்சும் போது இந்த வைரஸ் நுளம்பிற்குள் நுழைந்து பின்னர் நோயற்றுள்ள நபரை இந்த நுளம்பு கடிக்கும் போது நுளம்பிற்குள் உள்ள வைரஸ் நபரின் உடலுக்குள் சென்று விடும்.

டெங்கு வைரஸ் மாத்திரம் இன்றி ஸிக்கா வைரஸ் தொற்று பரவியுள்ள நபர் முக்கியமாக ஆண் ஒருவர் தனது மனைவியுடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்ளும் போது பரவக்கூடும் என விஞ்ஞான ரீதியில் உறுதியாகியுள்ள நிலையில், ஸிக்கா தொற்று உள்ள ஆணின் விந்தணு திரவத்தினுள் 8 - 9 வாரங்கள் அல்லது அதற்கு அதிக காலம் இந்த வைரஸ் தொற்று காணப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கமைய ஸிக்கா வைரஸ் தொற்றுள்ள நாட்டிற்கு பயணிக்கும் ஆண்கள் தங்களுக்கு ஏற்படும் காய்ச்சல் ஸிக்கா வைரஸா என்பதனை உறுதி செய்துக் கொள்வதற்காக வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த வைரஸ் நோய் தொற்று உள்ள ஒருவருக்கு உள்ள பாதகமான விடயம் என்ன என்றால் வைரஸ் உடலுக்கு சென்றிருந்தால் நூற்றுக்கு 80 வீதம் நோய் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினமாகும். ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள நோயாளிகளுக்கு 20 வீதம் மாத்திரமே நோயின் அறிகுறி தென்படும் என்பதனால் இந்த நோய் தொற்றுள்ள நாடுகளுக்கு சென்று வரும் நபர்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் போது நோய் அறிகுறி தென்படவில்லை என்றால் தான் குறித்த நோய் உள்ள நாட்டிற்கு பயணித்ததாக விமான நிலைய சுகாதார அதிகாரி அல்லது அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் அறிவிப்பது நோயை கட்டுப்படுத்த அவசியமாகும்.

ஸிக்கா தொற்றுள்ள நாடுகளுக்கு பயணித்த ஒருவர் இரண்டு வாரத்திற்குள் தான் அவ்வாறான நாட்டிற்கு பயணித்ததாக அதிகாரிகள் அறிவிப்பது அவசியமாகும்.

ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள நோயாளிக்கான பிரதான அறிகுறி, நீண்ட நாட்களாக காணப்படும் காய்ச்சல், தோல் தடித்தல் நிலைமை ஏற்படுதல், மூட்டுகளில் வலி மற்றும் கண்கள் சிவப்பாக மாறுதல், நோய் அறிகுறிகளுக்கு மேலதிகமாக தலைவலி, தசை வலி, கால்களில் வீக்கம் மற்றும் கண்களை சுற்றி வலி ஏற்படலாம்.

இந்த நோய் அறிகுறி 2 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம். வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவு நோய் தீவிர நிலைமையை அடைந்த நோயாளியை கண்டு பிடிப்பதென்பது அரிதான ஒரு விடயமாகும் என்பது வைத்தியர்களின் கருத்தாக உள்ளது. எனினும் கர்ப்பிணி தாய்மார்கள் இந்த நோய் தொற்றினால் பிறக்கும் குழந்தைகள் சிறியதாக காணப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸிக்கா தொற்று ஏற்பட்டமையினால் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் தலை சிறியதாக காணப்பட்ட குழந்தைகள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதங்களில் பதிவாகியுள்ளது.

மருத்துவ ரீதியாக புரட்சி கண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மலேசியா, யானைக்கால் நோய் என்பனவற்றை முற்றாக ஒழித்தாக நாடாக இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் உயிர்க்கொல்லி டெங்கு நோயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸிக்கா வைரஸின் அச்சுறுத்தல் தீவிரம் பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஸிக்கா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையை இலங்கையில் வழங்கும் வேலைத்திட்டம் அமுலாவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் கீழ் இது அமுலாகிறது. ஸிக்கா வைரஸ் தொற்றினால் சுவாச கட்டமைப்பு, சிறுவர்களின் மூளை வளர்ச்சி என்பனவற்றில் பாதிப்பு ஏற்படலாம். ஸிக்கா வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பது பற்றி, விமான நிலைய சுகாதார அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிள்ளைபேறுகள் இடம்பெறும் 57 வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்கள் பற்றிய ஆய்வு கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் கர்பிணி தாய்மார்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

அரசாங்க தனியார் வைத்தியசாலைகளில் உள்ள நோயாளர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதித்து அறிக்கையை வழங்குவதற்கான 24 மணித்தியால சேவையும் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழிகள் என்ன?

ஸிக்கா வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பிரதான வழி, ஈடிஸ் வகை டெங்கு நுளம்புகள் உருவாக்கதை முழுமையாக தடுக்க வேண்டும். தற்காக வெற்று ரின்கள், சிரட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள்,, வாகனங்களில் இருந்து அகற்றப்படும் டயர்கள் போன்றவைகளில் நிரம்பியுள்ள சுத்தமான மழை நீரை அகற்ற வேண்டும்.

நுளம்பு கடிப்பதனை தடுப்பதற்காக நுளம்பு வலைகளை பயன்படுத்த வேண்டும்.

உடலினை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும்.

வெளிப்பகுதிகளில் நிற்கும் போதும் நுளம்புகளை விரட்டும் பூச்சுகள் பூசுதல் என்பதன் ஊடாக ஸிக்கா வைரஸ் தாக்கத்தை தடுக்க முடியும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Comments