தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து 15-வது நாளாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்போலோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
முதல்வரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் உடன் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.
முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவர்களுடன், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். நாளையும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
அவர் மேலும் பல நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்.
பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
முக்கியமாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவில் உள்ள மருத்துவர்களின் பெயர்களையும் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அப்போலோ தெரிவித்துள்ளது.
- Vikatan