மிக மெதுவாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா!- அப்போலோ அறிக்கை

Report Print Samy in ஆரோக்கியம்
995Shares

அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 22 நாட்கள் கடந்து விட்டன.

தற்போது அவர் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில வாரங்களில் வீடு திரும்புவார்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனித்து வருகிறார்.

கோட்டையில், கடந்த ஒரு மாதமாக முடங்கிக் கிடந்த பணிகளை வேகப்படுத்தினாலும், கோப்புகள் நகர்வதாகத் தெரியவில்லை.

அதேநேரத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் சற்று உற்சாகம் அடைந்துள்ளனர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள்.

கடந்த மூன்று நாட்களாக முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று பூங்குன்றனை சைகையால் அழைத்தார். இதுவே, எங்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என விவரித்தவர்கள், முதல்வருக்கு மூச்சுத் திணறல், நீர்ச்சத்து குறைபாடு தொடர்ந்து இருந்ததால் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆன்டிபயாடிக் மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நுரையீரல் தொற்று பெருமளவு குறைந்துவிட்டது.

கடந்த பத்து நாட்களாக எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்னானி தலைமையிலான குழுவினரும் ரிச்சர்ட் பெயலும் தொடர் சிசிச்சைகளை அளித்து வருகின்றனர். அதற்கான பலன் கிடைத்து வருகிறது.

முதல்வர் தொண்டையில் போடப்பட்டுள்ள துவாரம்(Tracheostomy) வழியாகவே சுவாசித்து வருகிறார்.

அவ்வப்போது சின்னச் சின்ன வார்த்தைகளில் மெதுவாகப் பேசினார்.

திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் இன்னமும் வெண்டிலேட்டரில்தான் இருக்கிறார்.

டாக்டர்.சிவக்குமார், சசிகலா உள்ளிட்டவர்களிடம் மிக மெதுவாக ஓரிரு வார்த்தைகளை பேசினார்.

நேற்று மதியம் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் முதல்வருக்கு சிசிச்சை அளித்தனர்.

மாலை நேரத்தில் கிளம்பிச் சென்ற மருத்துவர்கள், இரவு மீண்டும் முதல்வரின் உடல்நிலையைக் கண்காணித்து விட்டுச் சென்றனர்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டுக்கு ஓர் அவசர வேலை இருந்ததால், வெளிநாடு திரும்பி விட்டார். இன்று மாலை முதல் அவரும் சிகிச்சை அளிக்க இருக்கிறார்.

முதல்வருக்கு கை, கால்களில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளை சரி செய்வதற்காக, தொடர்ந்து பிஸியோதெரபி சிசிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவர்கள் வந்து சென்ற பிறகு, பிஸியோதெரபி சிசிச்சையில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

விரைவில் முதல்வர் வீடு திரும்புவார் என நம்பிக்கையோடு தெரிவித்தார்.

- Vikatan

Comments