புகை மண்டலமாக மாறிய புதுடில்லி ...! காரணம் இலங்கையா?

Report Print Thayalan Thayalan in ஆரோக்கியம்
316Shares

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் கடந்த இரு நாட்களாக மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நேற்று அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. நேற்றிரவு 10 மணி வரை பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

தொடர் பட்டாசு வெடிப்பு காரணமாக புதுடில்லி மாநகரம் புகை மண்டலமாக மாறியது. இன்று காலை அடர்ந்த பனியும், பட்டாசு புகையும் சேர்ந்ததால் எங்கு பார்த்தாலும் வெண் புகை போல காணப்பட்டது.

காலை 8 மணி வரை டெல்லியின் பல பகுதிகளிலும் இந்த அடர்ந்த புகை இருந்தது. பட்டாசுகளின் நெடி காரணமாக மக்கள் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். டில்லியில் இன்று புகை மாசு 42 மடங்கு அதிகமாக இருந்தது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இன்று அதிகாலை மக்கள் அருகில் இருப்பவர்களை கூட பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் டில்லியில் இன்று அதிகாலை வாகனப் போக்குவரத்து மிக, மிக குறைவாக காணப்பட்டது.

முக்கிய சாலைகளில் இயக்கப்பட்ட வாகனங்கள் முன்பக்க விளக்கை எரிய விட்டபடி சென்றன. அலுவலகம் செல்பவர்கள் சற்று திணறலை சந்தித்தனர்.

டில்லியில் இன்று அதிகாலை காணப்பட்ட புகை மாசு அளவு சர்வதேச நாடுகளால் அபாயகரமான அளவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவு புகை மாசு பரவினால் பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடுவதை சீனா வழக்கத்தில் வைத்துள்ளது.

டில்லியில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான புகை மாசுக்கு, இலங்கையில் தயாரான பட்டாசுகளே காரணம் என்று கூறப்படுகிறது.

சுமார் 2 கோடி பேர் வாழும் டில்லியில் ஆண்டுக்கு ஆண்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, காற்று அதிக மாசுவுடன் இருப்பதாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

நேற்றிரவு , பட்டாசு வெடி எல்லாம் அற்புதம்தான். இப்போது மூச்சு திணருங்கள்’’ , என்று ப்ரதீக் ப்ரசஞ்சித் என்பவர் டிவிட்டரில் கருததைப் பதிவு செய்தா.

Comments