கிரீன் டீயால் ஆபத்து! மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

Report Print Thayalan Thayalan in ஆரோக்கியம்
கிரீன் டீயால் ஆபத்து! மக்களுக்கு ஓர் எச்சரிக்கை
909Shares

இன்று உலகளவில் பல மக்கள் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது கிரீன் டீ.

முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள், பின்னர் அது மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவியது.

கிரீன் டீயை முறைபடி அருந்தினால் மட்டுமே பலன்களை பெறலாம்.

கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.

நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது.

கிரீன் டீயை வெறும் வயிற்றில் எப்போது அருந்தவே கூடாது. ஏனென்றால், அது வயிற்றுக்கு தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும்.

உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடித்தால் அது நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் ஊட்டசத்துகளை நம் உடலில் சரியாக சேர விடாது மற்றும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதனால் எப்போதும் உணவு சாப்பிட்ட 30லிருந்து 45 மணி நிமிடங்கள் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.

இதேபோல் தூங்க செல்லும் முன்னர் கிரீன் டீ அருந்தவே கூடாது.

முக்கிய விடயமாக ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேலே கிரீன் டீ பருகுவது ஆபத்து என கூறும் மருத்துவர்கள் அப்படி அதை விட அதிகம் அருந்தினால் கல்லீரல் பாதிக்கபட நிறைய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

Comments