முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகி 53 நாட்கள் ஆகிவிட்டன.
அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார்? விசேட வார்டுக்கு மாற்றப்படுவார்? என்கிற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவே இல்லை.
இந்த நிலையில், அப்போலோ மருத்துவனை மருத்துவர் ஒருவர் கூறும்போது,
முதல்வர் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் இருக்கிறது. நாளை (14.11.16) பௌர்ணமி. நிறைந்த நாள். இன்று இரவு 10.37 மணிக்கு துவங்கி நாளை இரவு 8.17 வரை பௌர்ணமி இருக்கும்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் ஜெயலலிதாவை விசேட வார்டுக்கு மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன.
இரண்டாவது மாடியில் பிரத்தியேகமாக தயார் செய்துள்ள ஸ்பெஷல் வார்டிற்கு மாற்றப்படுகிறார்.
அங்கு வைத்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து விட்டு பிறகு அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சைக்கான முடிவுகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார்.
- Vikatan