ஜெயலலிதா சிறப்பு வார்ட்டுக்கு மாற்றப்பட்டார்!!

Report Print Samy in ஆரோக்கியம்
241Shares

அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா ஐசியுவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 58 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் அவரது தோழி சசிகலா நடராஜன் நேற்று வழிபாடு நடத்தினார்.

திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஆலயத்துக்கு வந்த சசிகலா நடராஜன், உறவினர்களுடன் சென்று வழிபாடு நடத்திவிட்டு அப்பல்லோ திரும்பினாராம்.

இதையடுத்து இன்று மாலை அப்பல்லோவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பக் கூடும் என முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

சிறப்பு வார்டுக்கு மாறினாலும் ஜெயலலிதா சுமார் 7 வாரங்கள் முழுமையாக ஓய்வெடுத்த பின்னரே வீடு திரும்புவார் என்றும் அரசு பணிகளை முழு அளவில் மேற்கொள்வார் என்று அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments